தேனி:
தமிழக அரசு மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி மற்றும் மே தினமான மே 1-ந்தேதி ஆகிய 2 நாட்களும் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இந்த 2 நாட்களும் அனைத்து அரசு மதுக்கடைகள், மதுபான பார்கள், தனியார் மதுபான பார்கள் அனைத்தையும் மூட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்த இருநாட்களிலும் மதுவிற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.