கலெக்டர் திவ்யதர்ஷினி 
செய்திகள்

மதுபான கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

திருச்சியில் மதுபான கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.

திருச்சி:

கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுப்பதற்காக மதுபானம் விற்க உரிமம் பெற்றுள்ள தனியார் மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் 26-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை விற்பனை இன்றி மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி மதுபான கடைகள் திறக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.