கைது 
செய்திகள்

கோவையில் மணல் கடத்திய டிரைவர் கைது

கோவையில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கோவை:

கோவை சுரங்க வருவாய்துறை அதிகாரி ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் கோவை- திருச்சி ரோடு ராவத்தூர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 யூனிட் கிரவல் மணலை எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரி ரமேஷ் லாரியையும் , டிரைவரையும் பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் லாரி டிரைவர் கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.