முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

புயல் நிவாரணப் பணி -கடலூர் மாவட்டத்திற்கு மேலும் ஒரு அமைச்சர் நியமனம்

கடலூர் மாவட்டத்தில் மழை, புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள மேலும் ஒரு அமைச்சரை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புரெவி புயலின் தாக்கத்தால், கடந்த 3.12.2020 முதல் 5.12.2020 வரை பெய்த கனமழையைத் தொடர்ந்து பாதிப்படைந்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிக பாதிப்பு இருப்பதால் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளங்கள் துறை அமைச்சர் சண்முகம் அவர்களும் மேற்கூறிய இரு அமைச்சர்களுடன் இணைந்து கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.