ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா தலைமையில் நேற்று முன்தினம் இரவு பங்காரு பாளையம் மண்டலம் பலிஜப்பள்ளி
வளைவு அருகில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒருவர் அட்டை பெட்டிகளை சுமந்து வந்தார். அவரை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த அட்டைபெட்டிகளை பிரித்து பார்த்தபோது, அதில் 58
மதுபான பாக்கெட்டுகள் கர்நாடகத்தில் இருந்து கடத்தி வந்ததாக கூறினார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலம் தேக்குமந்தா பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் எனத் தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.