ராஜீவ் ரஞ்சன் 
செய்திகள்

2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்- தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழக சட்டசபை தேர்தல் எதிரொலி காரணமாக 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. மார்ச் மாதம் தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடாக, நிர்வாகப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக வேளாண்மைத் துறை இணைச் செயலாளர் டி.ஆனந்த், அங்கிருந்து மாற்றப்பட்டு தமிழக இணை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைச் செயலாளர் அஜய் யாதவ், இடமாற்றம் செய்யப்பட்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பேரும் ஒரு ஆண்டு வரையிலோ அல்லது தேவையுள்ள வரையிலோ, இதில் எது முதலில் நேரிடுகிறதோ அதுவரை அவர்கள் அந்தப் பதவியில் நீடிப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.