சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கவிதா (40) என்ற காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு காவலர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, பெண் காவலர் கவிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டு இருந்தார். தற்போது கூடுதலாக ரூ.15 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த பெண் காவலர் கவிதாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படியுங்கள்... வடகிழக்கு பருவமழை தீவிரம்- திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பலத்த மழை எச்சரிக்கை