தீப்பற்றி எரியும் வாகனங்கள் 
செய்திகள்

சத்தீஸ்கரில் அரசு வாகனங்களுக்கு தீ வைப்பு- மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்

சத்தீஸ்கர் மாநிலத்தின் கொண்டகான் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

மாலை மலர்

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தொடர்ந்து வன்முறை தாக்குதல்களில் ஈடுபடுவதுடன், அரசு சொத்துக்களை சேதப்படுத்திவருகின்றனர். இதனால் சாலை போடும் பணி உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் பாதிக்கப்படுகின்றன. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில், கொண்டகான் மாவட்டம் தனோரா பகுதியில் மாவோயிஸ்டுகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சாலை போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த லாரிகள், ரோடு ரோலர்கள், டிராக்டர்கள் என மொத்தம் 11 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ வைத்தனர். 

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை படிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.