போக்குவரத்து நெரிசல் 
செய்திகள்

சென்னை கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் கடும் அவதி

சென்னை கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

சென்னை:

சென்னை கடற்கரை சாலையில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்த போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

விடுமுறையையொட்டி மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காடு போன்ற இடங்களுக்கு சென்ற மக்கள் ஏராளமானோர் தங்களது சொந்த கார்கள் மற்றும் பைக்குகளில் சென்றனர். இவர்கள் ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழைய மகாபலிபுரம் சாலை, உத்தண்டி, கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது