விபத்து பலி 
செய்திகள்

செங்கம் அருகே கார் மோதி பெண் பலி

செங்கம் அருகே கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

செங்கம்:

செங்கம் அருகே நந்திமங்கலம் கூட்ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நந்திமங்கலம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவருடைய மனைவி லலிதா (55) என்பவர் பஸ்சுக்காக காத்து இருந்தார். அப்போது செங்கத்திலிருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லலிதா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த புதுப்பாளையம் போலீசார் லலிதாவின் உடலை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.