கோப்புபடம் 
செய்திகள்

நொய்யல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு

நொய்யல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நொய்யல்:

நொய்யல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அந்த பெட்டிக்கடையை சோதனை செய்தனர். அப்போது அங்கு நொய்யல் பகுதியை சேர்ந்த சரசு (வயது 60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் குந்தாணி பாளையம் செல்லும் பஸ் நிறுத்தம் அருகே சிவராமன் (வயது 30) என்பவர் தனது பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT