விபத்து 
செய்திகள்

புதுச்சத்திரம் அருகே கார்-லாரி மோதல்: முதியவர் பலி

புதுச்சத்திரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மாலை மலர்

நாமக்கல்:

சேலம் பேலஸ் தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 70). இவரது மகன் ரவிச்சந்திரன் (45), மருமகள் கீதா (42). இவர்கள் 3 பேரும் ஒரு வாடகை காரில் திருச்சியில் நடைபெறும் உறவினர் திருமணத்தில் பங்கேற்க சென்றனர்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பிரிவு ரோடு பகுதியில் வந்தபோது முன்னே சென்ற முட்டை லாரி ஒன்று வளைவில் திரும்பியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 3 பேருக்கும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.