கோப்பு படம் 
செய்திகள்

மத்தியபிரதேசம்: கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி

மத்தியபிரதேச மாநிலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

போபால்:

மத்தியபிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள நெடுச்சாலையில் இன்று ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் பணம் செய்தனர்.

பண்டோல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT