கவிழ்ந்து கிடக்கும் காரை படத்தில் காணலாம். 
செய்திகள்

பொள்ளாச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

பொள்ளாச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

மாலை மலர்

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள பெரும்பதியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி காரில் 3 பேர் சென்றனர். அந்த கார் பெரும்பதியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரைப்பாலத்தின் கரையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.