விபத்து 
செய்திகள்

நீடாமங்கலம் அருகே பஸ் மோதி முதியவர் பலி

நீடாமங்கலம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம்-தஞ்சை சாலையில் உள்ள ஆதனூர் தட்டி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது65). இவர் நேற்று அதிகாலை பால் வாங்குவதற்காக நீடாமங்கலத்திற்கு வந்தார். அப்போது திருவாரூரிலிருந்து தஞ்சையை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ஆரோக்கியசாமி மீது மோதியது. 

இதில் படுகாயமடைந்த ஆரோக்கியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆரோக்கியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.