கோவில்பட்டி:
கோவில்பட்டி பாரதி நகர் மேட்டு தெருவைச் சேர்ந்த மைக்கேல் மகன் ராம்ராஜ் வயது (30) . கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சீதா. இவர்களுக்கு 7-வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சீதா தன்னுடைய மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராம்ராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் குரு சித்திரவடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ராம்ராஜ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ராம்ராஜ் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.