நாகர்கோவில்:
தமிழக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்த அனைத்து சங்க கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். தொழிற்சங்கத்தோடு கடந்த மாதம் 5-ந் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 9-ந் தேதி அனைத்து பி.எஸ்.என்.எல். கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலைநேர தர்ணா நடந்தது.
இதேபோல் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது. ஊழியர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜூ, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.