சாத்தான்குளம்:
தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்தைச் சேர்ந்தவர் பொன்னம்பலநாதன் (வயது 45). நிலத்தரகரான இவருக்கும், மற்றொரு நிலத்தரகரான முதலூரைச்சேர்ந்த திரவியராஜ் (47) என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதில் திரவியராஜ் கார் சாவியை பொன்னம்பலநாதன் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகார் குறித்த விசாரணைக்கு பொன்னம்பலநாதனை அழைத்து வர தட்டார்மடம் போலீஸ் நிலைய தலைமை காவலர் கார்த்திக் அருணாச்சலம் (38), போலீஸ்காரர் ராஜேஷ் (28) ஆகியோர் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பொன்னம்பலநாதன், அவரது சகோதரர் சக்திக்குமார் (47) , உறவினர் பலவேசம் மகன் ராஜா (43) ஆகியோர் போலீசாரை தாக்கினர். இதில் காயமடைந்த கார்த்திக் அருணாச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது தொடர்பான புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குபதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் பொன்னம்பலநாதன், அவரது சகோதரர் சக்திக்குமார் ஆகியோரை ஈரோட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.