கோப்பு படம். 
செய்திகள்

வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை- ரூ.1 லட்சம் திருட்டு

வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கீழநல்லபூர்மெயின் ரோட்டை சேர்ந்தவர் மோகன்(வயது42). இவர் நேற்றுமுன்தினம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டார். நேற்று அதிகாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதி்ர்ச்சி அடைந்தனர். பின்னர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மோகன் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். வீட்டின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது