மரணம் 
செய்திகள்

போடி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த மெக்கானிக் பலி

போடி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போடி:

போடி அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 40). இவர் போடி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த 14-ந்தேதி இவர் வீட்டின் அருகே உள்ள பாலத்தின் மீது அமர்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி பாலத்தில் இருந்து 16 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.