வருண்காந்தி 
செய்திகள்

வருண்காந்தி, 100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் நன்கொடை

கொரோனா பேரிடரில் இருந்து பிலிப்கிட் மாவட்ட மக்களை காப்பாற்ற எனது மொத்த சொத்துக்களையும் அடமானம் வைத்தாவது உதவுவேன் என வருண்காந்தி கூறியுள்ளார்.

பிலிப்கிட்:

உத்தரபிரதேச மாநிலம் பிலிப்கிட் தொகுதி பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் வருண்காந்தி. இவர் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை நேற்று நன்கொடையாக வழங்கி உள்ளார். மாவட்ட நிர்வாகத்திடம் அந்த சிலிண்டர்கள் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து வருண்காந்தி ஏற்கனவே வாக்குறுதி வழங்கியிருந்தார். “கொரோனா பேரிடரில் இருந்து பிலிப்கிட் மாவட்ட மக்களை காப்பாற்ற எனது மொத்த சொத்துக்களையும் அடமானம் வைத்தாவது உதவுவேன். விரைவில் 100 மிகப்பெரிய சிலிண்டர்களை வழங்குவேன். அவற்றை நிரப்பும் செலவை ஏற்பேன்” என்று கூறியிருந்தார். அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி உள்ளார்.

SCROLL FOR NEXT