நாளை அக்டோபர் 1-ந் தேதி பிறக்கிறது. அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்று ஒரு தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதன் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படுமோ என்று பொதுமக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு நிலவிவருகிறது. இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
அக்டோபர் மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் வருவதால் நாடு முழுவதும் சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஆனாலும் பொதுமக்களின் வசதிக்காக ஆன்லைன் சேவைகள் வழக்கம்போல செயல்படும். மேலும் ஏ.டி.எம். மையங்களில் போதிய பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையும் படியுங்கள்...சென்னை வங்கிகளில் ரூ.6 கோடி மோசடி: கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது