200 ரன்கள் சேர்த்த ஜோடி 
செய்திகள்

லிட்டன் தாஸ் சதமடித்து அசத்தல் - முதல் நாள் முடிவில் வங்காளதேசம் 253/4

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேசத்தின் முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்துள்ளது.

மாலை மலர்

சட்டோகிராம்:

பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3  டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் பாகிஸ்தான் 3-0 என வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் 49 ரன்கள் எடுப்பதற்குள் வங்காளதேசம் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரஹிம் அரை சதமடித்தார். லிட்டன் தாஸ் சதமடித்து அசத்தினார். ஆட்ட நேர முடிவில் லிட்டன் தாஸ் 113 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையும் படியுங்கள்...தொடக்க ஜோடி பதிலடி: நியூசிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 129