கைது 
செய்திகள்

திருமுல்லைவாயலில் ஆட்டோ திருடிய 2 பேர் கைது

திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையின் வெளியே நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி:

திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் ஆட்டோ ஓட்டிவந்தார். கடந்த 3-ந்தேதி அவர் திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையின் வெளியே ஆட்டோவை நிறுத்தி விட்டு உறவினரை பார்க்க ஆஸ்பத்திரிக்குள் சென்றார். திரும்பி வந்தபோது ஆட்டோ மாயமாகி இருந்தது. அதனை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை திருடி சென்ற நடுக்குத்தகை பகுதியை சேர்ந்த பழனிசாமி, அபினேஷ் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT