தற்கொலை 
செய்திகள்

ஆத்தூர் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

ஆத்தூர் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமம் அரசினர் உயர்நிலைப்பள்ளி அருகே வசித்து வந்தவர் ராமச்சந்திரன், விவசாயி. இவரது மகன் வினோத் குமார் (வயது 29), கொத்தனார். திருமணமாகாத இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதில் மனவேதனை அடைந்த வினோத் குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.