கோப்புபடம் 
செய்திகள்

தர்மபுரியில் 2 கடைகளில் கொள்ளை முயற்சி

தர்மபுரியில் 2 கடைகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி 4 ரோடு பகுதியில் ஒரு ஜவுளிக்கடை, ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஆகிய 2 கடைகளில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். 

அங்கு பணம் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று காலை அந்த 2 கடைகளின் உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது தங்களது கடைகளில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. 

இதுதொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.