தடகள பயிற்சியாளர் நாகராஜன் 
செய்திகள்

பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஜாமீன் கோரி சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மனு தாக்கல் செய்தார்.

சென்னை:

சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், சென்னை பாரிமுனையில் தடகள பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார்.

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நாகராஜனிடம் பயிற்சி பெற்ற வீராங்கனை ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை பூக்கடை மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

இந்தநிலையில் ஜாமீன் கோரி, சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நாகராஜன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாலும், முழுமையாக முடிவடையாததாலும் நாகராஜனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதாடினார்.

அதைத்தொடர்ந்து, நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT