நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி. 
செய்திகள்

நல்லூர் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மாலை மலர்

கந்தம்பாளையம்:

ராமநாதபுரம் மாவட்டம் வட்டானம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் அகல்யா (வயது 23). காரைக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்துள்ளார். இவரது உறவினர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை குளக்கரையை சேர்ந்த ஜேசுராஜ் மகன் அருளானந்து (26). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். 

அகல்யாவுக்கும், அருளானந்துக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அகல்யா வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல்லுக்கு வந்தார். பின்னர் அகல்யா, அருளானந்து ஆகியோர் பரமத்தி தாலுகா கண்ணம்பாளையத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பட்டதாரி பெண் அகல்யா தனது காதலனுடன் பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசார் காதல் ஜோடியினரின் பெற்றோரை போனில் அழைத்து பேசினர். பின்னர் அகல்யாவை காதல் கணவர் அருளானந்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.