உதவி ஆய்வாளர் 
செய்திகள்

வாகனம் ஏற்றி உதவி ஆய்வாளர் கொலை- போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு (54) என்பவர் மினிலாரி ஏற்றி கொல்லப்பட்டார்.

வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தப்பி ஓடிய முருகவேல் என்பவரை தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து பணியாற்றி வந்தவர்  உதவி ஆய்வாளர் பாலு என்பது குறிப்பிடத்தக்கது.