ஆஸ்பத்திரியில் சிகிச்சை 
செய்திகள்

அசாமில் பிரசாதம் சாப்பிட்ட 200 பேருக்கு உடல் நலக்குறைவு

அசாமில் பிரசாதம் சாப்பிட்ட 200 பேருக்கு காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட கோளாறுகள் ஏற்பட்டதையடுத்து, பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

மோரிகான்:

அசாமின் கோஜாய் மாவட்டத்தின் லங்கா நகரில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதை சாப்பிட்ட பலருக்கும் காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட கோளாறுகள் ஏற்பட்டன. 200-க்கும் மேற்பட்டோருக்கு இந்த உடல் நல பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதில் பலரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.