யானை 
செய்திகள்

ஆசனூர் அருகே சாலையை வழிமறைத்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அடுத்த செம்மண் திட்டு அருகே ஒற்றை காட்டு யானை சாலையை வழிமறைத்து நின்று கொண்டிருந்தது. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் வனச்சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் திண்டுக்கலில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆசனூர் அடுத்த செம்மண் திட்டு அருகே ஒற்றை காட்டு யானை சாலையை வழிமறைத்து நின்று கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஒட்டிகள் வாகனத்தை தூரமாக நிறுத்தி கொண்டனர். இருபுறமும் வாகங்கள் அணிவகுத்து நின்றன. சாலையில் உலா வந்த காட்டு யானை பின்னர் தானாக வனப்பகுதிக்குள் சென்றது.

அதன் பின்னர் வாகனங்கள் சென்றன. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.