தற்கொலை 
செய்திகள்

ஆற்காடு அருகே வாலிபர் தற்கொலை

ஆற்காட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு:

ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் அஸ்வந்தன் (வயது 23), பட்டதாரி. இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இதனால் மனமுடைந்து இருந்த அஸ்வந்தன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.