மரணம் 
செய்திகள்

ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு:

ஆற்காடு அருகே முப்பதுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவர் நேற்று முன்தினம் மாலை ஆற்காட்டில் இருந்து முப்பதுவெட்டி செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் (42) என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் லட்சுமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.