மரணம் 
செய்திகள்

அரவக்குறிச்சி அருகே அழுகிய நிலையில் பெண் பிணம்

அரவக்குறிச்சி அருகே அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி அருகே பெரியமஞ்சுவெளி ஊராட்சி நெல்லிக்கோம்பை குடகனாறு பாலம் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுதொடர்பாக பெரியமஞ்சுவெளி கிராம நிர்வாக அலுவலர் ராமலிங்கம், அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.