தற்கொலை 
செய்திகள்

அறந்தாங்கி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

அறந்தாங்கி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி சிவந்தி (வயது 40). சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். சிவந்தி மட்டும் தனியாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வேதனை தாங்காமல் அவர் தனது உடலில்மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.