கைது 
செய்திகள்

அரக்கோணம் அருகே மதுவிற்ற வாலிபர் கைது

அரக்கோணம் அருகே மதுவிற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த மேல்அரும்பாக்கம் பகுதியில் மதுவிற்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மதுவிற்ற மேல்அரும்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சிவலிங்கம் மகன் விஜயன் (வயது 27) என்பவரை கைது செய்து, 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.