அப்துல்கலாம் சமாதி முன்பு குடும்பத்தினர், ஜமாத் நிர்வாகிகள் தொழுகை நடத்தினர் 
செய்திகள்

90வது பிறந்தநாள்- அப்துல்கலாம் மணிமண்டபத்தில் குடும்பத்தினர் மலரஞ்சலி

ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள மணிமண்டபத்தில் அப்துல் கலாமின் சமாதி முன்பு குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தொழுகை நடத்தினர்.

முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் 90-வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பேக்கரும்பில் உள்ள மணிமண்டபத்தில் அப்துல் கலாமின் சமாதி முன்பு குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தொழுகை நடத்தினர். அதன் பின்னர் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இனிப்பு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.