அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ஆர் வேல்ராஜ் நியமனம் 
செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜ் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்.

மாலை மலர்

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டாக்டர் ஆர்.வேல்ராஜ், துணைவேந்தராக 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்  என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.