தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். மீன்வளத்துறை அமைச்சராக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (68) உடன்குடி அருகே தண்டுபத்து கிராமத்தைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் வென்ற இவர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரானார்.