அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம். 
செய்திகள்

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன் வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்கிட கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன் வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாலை மலர்

திருவாரூர்:

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாலதி முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் ரா.மாலதி, கிராம உதவியாளர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், சுமை பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலைமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.