ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே மேக்கிழார்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ்(வயது 42). தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்தது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுப்புராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.