தற்கொலை 
செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே விவசாயி தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி ரெயில்வே பீடர் சாலை பகுதியை சேர்ந்தவர் முருகப்பன் (வயது 62). விவசாயி. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று வேலப்பர்கோவில் சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலை அருகே முருகப்பன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.