ஜெகன்மோகன் ரெட்டி 
செய்திகள்

9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச லேப்டாப் - ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திராவில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைக்கப்படும், ஏழை மக்களுக்கு 2.62 லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமராவதி:

ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமராவதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மந்திரி நானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆந்திராவில் அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்க, அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தால் ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தரம் உயரும். 

விஜயநகரத்தில் பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றவும், டிட்கோ சார்பில் 2.62 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு பங்கீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.