கோப்புபடம் 
செய்திகள்

தலைவாசல் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி பலி

தலைவாசல் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தலைவாசல்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி லட்சுமி (வயது 65). இவர் சம்பவத்தன்று தலைவாசல் அடுத்துள்ள ஆறகளூரில் துக்க நிகழ்ச்சிக்கு தனது மகன் பார்த்திபனுடன் வந்துள்ளார். பின்னர் இரவில் சைக்கிளில் அவர்கள் திரும்பினர். ஆனால் சைக்கிளை ஓட்ட முடியாததால், பார்த்திபன் தனது தாயை நடந்து வரக்கூறி விட்டு, சென்று விட்டார். ஆனால் இரவில் அவர் வீடு திரும்பவில்லை. பின்னர் காலையில் சென்று பார்த்த போது, லட்சுமி, பெரியேரி தனியார் மில் அருகில் செல்லும் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.