மரணம் 
செய்திகள்

அம்மாபாளையம் அருகே விவசாயி மர்ம மரணம்

அம்மாபாளையம் அருகே விவசாயி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரி என்ற சந்திரசேகர்(வயது 50). விவசாயியான இவருக்கு செல்வி என்ற மனைவியும், லோகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். செல்வி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். லோகேஸ்வரிக்கு திருமணமாகி விட்டது. இதனால் தனியாக வசித்து வந்த சந்திரசேகர், நேற்று அம்மாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலத்தின் அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திரசேகரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுகுடிக்கும் பழக்கம் உடைய சந்திரசேகர் குடிபோதையில் பாலத்தில் படுத்திருந்தபோது கீழே விழுந்ததில் இறந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.