தற்கொலை 
செய்திகள்

ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர்:

ஆம்பூரை அடுத்த மலையம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 30). தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பானுபிரியா (28) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு விரக்தி அடைந்த பானுபிரியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பானுபிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.