ஆம்பூர்:
ஆம்பூரை அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு (வயது 23), ராஜேஷ் (22),
குமரன் (20) மற்றும் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த மோகன் (23) ஆகிய 4 பேரை வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பிடித்து போலீசில்
ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.