அலங்காநல்லூர்:
மதுரை தேனூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது52). கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பர் அழகர்சாமியுடன் மோட்டார் சைக்கிளில் அலங்காநல்லூர் அருகே அய்யூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு போய்விட்டு திரும்பி அரியூர் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அழகர்சாமி மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.