கைது 
செய்திகள்

அரசு அனுமதி இன்றி கல்குவாரி நடத்தி வந்த அ.தி.மு.க. பிரமுகர் கைது

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசு அனுமதி இன்றி கல்குவாரி நடத்தி வந்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் மரக்காணம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

இவர் கீழ் அருங்குணம் கிராமத்தில் அனுமதி இன்றி கல்குவாரி நடத்தி வருவதாக பிரம்மதேசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனி பாபு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அரசு அனுமதி இல்லாமல் குவாரி நடத்தி வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அ.தி.மு.க.பிரமுகர் குமரவேலை கைது செய்தனர்.