அம்மா மினி கிளினிக்கை பொற்கொடி திறந்து வைத்த போது எடுத்த படம். அருகில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளார். 
செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் ஒரே நேரத்தில் 3 பாலங்கள் கட்டப்பட்டன - முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா பேச்சு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரே நேரத்தில் 3 பாலங்கள் கட்டப்பட்டன என்று முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா பேசினார்.

மாலை மலர்

பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற வளாகம் அருகாமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர். பொற்கொடி கலந்துகொண்டு அம்மா மினி கிளினிக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் மற்றும் செவிலியர்கள் வரவேற்றனர். விழாவில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:- அழகன்குளத்தில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள அம்மா மினி கிளினிக்கில் தினந்தோறும் மருத்துவர், செவிலியர்கள் பணியில் இருந்து உங்களுக்கு மருத்துவ உதவிகள் செய் வார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேரடியாக சந்தித்து மனு கொடுத்து மாவட்டத்திற்கு 3 பாலங்கள் பெற்று சுமார் ரூ. 12 கோடி செலவில் 3 பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

நதிப் பாலத்தில் மழைக்காலங்களில் மக்கள் பஸ் வசதி யின்றி படகு மூலம் பாலத்தை கடந்து வந்த நிலை இருந்தது. இதற்காகவே நதிப் பாலத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு ரூ.5.5 கோடி செலவில் பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதேபோல் காருகுடி, காரேந்தல் பாலங்களும் ஒரே நேரத்தில் கட்டிமுடிக்கப் பட்டதும் அ.தி.மு.க. ஆட்சியில் தான். மேலும் ஆற்றங்கரை முதல் சித்தார்கோட்டை வரை உள்ள சாலை எம்.பி.யாக பணியாற்றிய காலத்தில் அகல சாலையாக அமைக்கப்பட்டது. மாவட்டத்தை முன்னேற்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2012-2013 வருடத்திலேயே ஒரே நேரத்தில் 3 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மாவட்டத்திற்கு தந்தார்.

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தேன். அதை நிறைவேற்றும் வகையில் உடனடியாக அப்துல்கலாம் பெயரில் கலைக் கல்லூரி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ராம நாதபுரம் மாவட்டத்தில் பொருளாதார ரீதியாகவும் கல்வித ்துறையிலும் முன்னேற் றத்தை கொண்டுவர வேண்டும் என்று அயராது உழைத்துக் கொண்டு இருக்கிறேன். அம்மா மினி கிளினிக்கை அனைவரும் சிறப்பாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அழகன்குளம் ஊராட்சி தலைவர் வள்ளி, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் சபியா ராணி, வட்டார ஐக்கிய ஜமாத் செயலாளர் பக்ருல் அமீன், முஸ்லிம் ஜமாத் தலைவர் முகமது பஷீர், செயலாளர் லுக்மான், இந்து சமூக தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் வக்கீல் அசோகன், முன்னாள் வருவாய் அலுவலர் குணசேகரன், ஊராட்சி துணை தலைவர் இஸ்மாயில், முன்னாள் ஊராட்சி துணை தலைவர் கார்மேகம், ஊராட்சி உறுப்பினர் ஜெய்லானி ஆகியோர் பூங்ெகாத்து கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் சித்தார்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மகேசுவரி சசிக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அழகன்குளம் சேகு சபியுல்லா, உச்சிப்புளி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மால்மருகன், புதுவலசை ஆரம்ப சுகாதார ஆய்வாளர் ராஜா பார்த்தசாரதி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். முடிவில் அனைவருக்கும் ஊராட்சி துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் நன்றி கூறினார்.